
பாசத் தலைவனுக்கு பாராட்டு விழா என்ற தலைப்பில், தமிழக முதல்வர் கருணாநிதிக்கு தமிழ்த் திரையுலகமே ஒரு பெரும் பாராட்டு விழா எடுத்தது. அந்த விழாவில்தான் எங்களை மிரட்டி பாராட்டு விழாவுக்கு வர வைக்கிறார்கள் என்று குரல் கொடுத்தார் அஜித். அதன் பிறகு ஆளாளுக்கு பதில் குரல் கொடுக்க, எப்படியோ நடக்கவிருந்த பாராட்டு விழா, ஒரு மாதிரி நடந்து முடிந்தது. இப்போது அந்த பாராட்டு விழாவை, கலைஞர் தொலைக்காட்சி விரைவில் ஒளிபரப்புகிறது. இதற்கான கிளிப்பிங்ஸ் மற்றும் புரமோஷனல் விளம்பரங்கள் தற்போது கலைஞர் குழும சேனல்களில் உலா வருகின்றன. இதில் ரஜினி, கமல்ஹாசன், விஜய், விக்ரம், சூர்யா மற்றும் நடிகைகளின் பெயர்களைக் கூட குறிப்பிடும் அறிவிப்பாளர், அந்த நட்சத்திர பட்டியலில் அஜித் பெயரை மட்டும் குறிப்பிடவில்லை. மனைவி ஷாலினி சகிதம் பங்கேற்ற அவரது படமும் கூட தவிர்க்கப்படுகிறது. விழாவின் சிறப்பம்சமே அஜித்தின் பேச்சுதான். அதையும் தெளிவாக தவிர்த்து விட்டுள்ளனர். மொத்தத்தில் இந்த நிகழ்ச்சிக்கு அஜித்தும் வந்திருந்தார் என்றாவது காட்டுவார்களா?
0 comments:
Post a Comment