
குள்ளமான உருவம், சற்றே விகாரமான, மன வளர்ச்சி குன்றிய மாணவனின் தோற்றம்... என பா படத்தில் வித்தியாசமாக நடித்திருந்தார் இந்தி சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன். இந்த உருவத்தை முதல் தடவை பார்ப்பவர்களுக்கு அது யார் என்பது நிச்சயம் புரியாது. சற்று நேரம் அந்த உருவத்தின் உடல் மொழியை உற்றுப் பார்ப்பவர்கள் ஒரு கணம் பிரமித்து போவார்கள். உலகமெங்கும் உள்ள இந்திய திரை ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படம் பா. மேக்கப் செலவில் ஒரு வித்தியாசமான படத்தையே எடுத்திருக்கிறார் பால்கி. இந்தப் படத்தின் கதை மட்டுமல்ல... அமிதாப்பின் தோற்றமும் வித்தியாசமானது. மனவளர்ச்சி குன்றிய இளைஞனாக இதில் தோன்றிய அமிதாப். மேக்கப் செய்ய லண்டனிலிருந்து நிபுணர் ஒருவர் வரவழைக்கப்பட்டாராம். இதனையடுத்து கமலஹாசன் பா படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக பா படத்தில் இசையமைத்த இளையராஜாவை சந்தித்துள்ளார் கமல். அப்போது பா படத்தை பற்றி கமலஹாசனும், இளையராஜாவும் பேசியதாக தெரிகிறது. ஆனால் பா ரீமேக்கில் கமல் தான் நடிக்கிறார் என்ற எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் வெளிவரவில்லை. மேலும் கோடம்பாக்கத்தில் பா படத்தின் ரீமேக்கில் நடிக்க கமல் தான் சரியானவர் என்பது பலரின் கருத்து. உலகநாயகனாச்சே! சும்மா அசத்திடமாட்டாரா என்ன?
0 comments:
Post a Comment