Monday, February 22, 2010

நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்புக்கு சொந்தமாக பள்ளிக்கூடம் கட்டி, இலவசமாக கல்விச் சேவையாற்ற வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. சமீபத்தில் சங்கீதா என்ற பிஸியோதெரபிஸ்ட்டை கரம்பிடித்த கஞ்சா கருப்பு, தனது லட்சியத்தில் உறுதியாக இருக்கிறாராம். பிசியோதெரபி தேர்வு எழுதியிருக்கும் சங்கீதா, தேர்ச்சி பெற்றதும், சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் வேலைக்கு சேரப்போகிறார். வாங்கும் சம்பளத்தில் பாதியை தன் மாமனார் - மாமியாருக்கு தர வேண்டும் என்று கூறியிருக்கிறாராம் கஞ்சா கருப்பு. மீதமுள்ள தொகையை வைத்து, படிக்க வசதியில்லாத மாணவர்களுக்கு உதவ வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். இதுபற்றி கஞ்சாவிடம் கேட்டால், அந்த புள்ளய படிக்க வெச்சது அவுங்க அப்பா - அம்மாதானேண்ணே.... அதான் சம்பளத்துல பாதியை அவுங்களுக்கு கொடுக்கணும்னு சொல்லியிருக்கேன். மீதி பணத்த கஷ்டப்படுற பசங்களுக்கு உதவுறதுக்கு பயன்படுத்தணும்னு ரெண்டு பேரும் சேர்ந்து முடிவு பண்ணிருக்கோம்ணே... என்கிறார் மனிதாபிமானத்துடன்

0 comments:

Post a Comment