
3 இடியட்ஸ் இந்திப் படத்துக்குப் பிறகு, அமிதாப்புடன் நடித்துள்ள தீன்பத்தி படத்தின் இறுதிவேலையில் இருக்கிறார் மாதவன். இதுகுறித்து அவர் கூறியது: தீன்பத்தி படத்துல பேராசிரியரா நடிச்சிருக்கேன். காந்தி வேடத்துல நடிச்ச ஹாலிவுட் நடிகர் பென் கிங்க்ஸ்லியோட ஒரு காட்சியில் வர்றேன். லண்டன்ல படப்பிடிப்பு நடந்துச்சு. அவரோட ஒரு நாள்தான் படப்பிடிப்பு நடந்தது. ஆனாலும், நல்ல அனுபவமா இருந்தது. இந்தப் படத்துக்குப் பிறகு தமிழ், இந்தியில தொடர்ந்து நடிக்க போறேன். தமிழ்ல இரண்டு படங்கள். அடுத்த வாரத்துல இதுக்கான அறிவிப்பு வரும். சினிமாவுல அதிர்ஷ்டம்தான் முக்கியம். அது எப்படி நம்மை கொண்டு போகுதோ அந்த வழியிலதான் நம்மால போக முடியும். எனக்கு அதிர்ஷ்டம் நிறைய இருக்குன்னு நினைக்கிறேன் என்று கூறுகிறார்.
Labels: kollywood tamaka
0 comments:
Post a Comment